Pooja hegde :தொடர் தோல்விக்கு பின் ரூட்டை மாற்றிய பீஸ்ட் நாயகி... அசுரனுடன் ஐட்டம் டான்ஸ் ஆடும் பூஜா ஹெக்டே
Pooja hegde : ராதே ஷ்யாம் மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்த கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார் பூஜா ஹெக்டே.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடந்த மாதம் ராதே ஷ்யாம் திரைப்படமும், இந்த மாதம் பீஸ்ட் திரைப்படமும் வெளியாகின. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்த கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார் பூஜா ஹெக்டே.
அதன்படி நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள பூஜா ஹெக்டே தற்போது அனில் ரவிப்புடி இயக்கத்தில் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘எஃப் 3’ படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
‘எஃப் 3’ படத்தில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக நடிகை தமன்னா மற்றும் மெஹ்ரின் பிர்சாடா ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்துள்ளார். விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார்.
நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான நாரப்பா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதால் அவர் அடுத்ததாக நடித்து வரும் எஃப் 3 படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாரப்பா திரைப்படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதில் தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Ilaiyaraaja : மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார்... புகழ்ந்து தள்ளிய இளையராஜா