Ilaiyaraaja : மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார்... புகழ்ந்து தள்ளிய இளையராஜா

Ilaiyaraaja : மோடியை அம்பேதக்ரோடு ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை கிண்டலடித்து பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

Music director ilaiyaraaja praises PM Modi

‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி உள்ளார். அந்த புத்தகத்தின் முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து இசைஞானி இளையராஜா எழுதி உள்ளதாவது: “பிரதமர் மோடி  தலைமையிலான அரசின் நிர்வாகத்தினால், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவர் பிரதமராக பொறுப்பேற்ற பின் அனைத்து துறைகளுமே முன்னேறித்தைக் கண்டு உள்ளன.

இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. சமூக நீதி விவகாரத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக முத்தலாக் தடை சட்டத்தை இயற்றியதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் பிரதமர் மோடி. மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று இளையராஜா பாராட்டியுள்ளார்.

Music director ilaiyaraaja praises PM Modi

மேலும், மோடி மற்றும் அம்பேத்கர் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க அவர்கள் பாடுபட்டுள்ளார்கள். இருவருமே இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவுகளை கண்டதுடன் அதன் செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டு இருந்ததாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார். 

மோடியை புகழ்ந்து இளையராஜா எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இளையராஜாவை கிண்டலடித்து பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி மோடியை அம்பேதக்ரோடு ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை விமர்சித்து ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை டிரெண்ட் செய்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் படியுங்கள்... KGF 2 Box Office :முதல் நாளிலேயே ரூ.100 கோடியை தாண்டிய வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ‘கே.ஜி.எஃப் 2’

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios