- Home
- Cinema
- Beast director Nelson : கூர்கா படத்தின் காப்பியா 'பீஸ்ட்'? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த நெல்சன்
Beast director Nelson : கூர்கா படத்தின் காப்பியா 'பீஸ்ட்'? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த நெல்சன்
Beast director Nelson : பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்த நெட்டிசன்கள், இது யோகிபாபு நடித்த கூர்கா படத்தின் சாயலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், விமர்சனங்களையும் எதிர்கொண்டது. குறிப்பாக இது யோகிபாபு நடித்த கூர்கா படத்தின் சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் நெல்சன் கூறியதாவது: பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஷாப்பிங் மால்-ஐ ஹைஜேக் செய்யும் கதைக்களம் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லை. இதை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. ஆனால் கதை சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் அமைப்பிலும் தான் அவை வேறுபடும். இம்மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களில் சில காட்சிகள் ஒரே மாதிரி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. கூர்கா படத்தை நானும் பார்த்திருக்கிறேன்.
அந்த படத்துக்கும் பீஸ்ட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோல் மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் எந்தவித சம்பந்தம் இல்லை. வழக்கமாக என்னுடைய படங்களின் டிரைலர்கள் ஒரு விதமாகவும், படங்கள் வேறு விதமாகவும் இருக்கும், டிரைலரில் வரும் சீன்களை வைத்து மட்டும் படங்களை தீர்மானிக்க முடியாது. மேலும் பீஸ்ட் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் படியான காட்சிகள் எதுவும் இல்லை. அது படம் பார்க்கும்போது எல்லோருக்கும் புரியும்.
விஜய் சார் என்னை அழைத்து ஒரு கதை ரெடி பண்ணுங்கனு சொன்ன பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் பீஸ்ட். இப்படம் நிச்சயம் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். அதே வேளையில் அவரது ரசிகர்களை திருப்பதி படுத்துவதாகவும் இருக்கும்” என்று இயக்குனர் நெல்சன் கூறினார்.
இதையும் படியுங்கள்... Beast வருகையால் ஓரங்கட்டப்படும் KGF 2! தமிழகத்தில் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் ராக்கி பாய் அப்செட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.