- Home
- Cinema
- Beast வருகையால் ஓரங்கட்டப்படும் KGF 2! தமிழகத்தில் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் ராக்கி பாய் அப்செட்
Beast வருகையால் ஓரங்கட்டப்படும் KGF 2! தமிழகத்தில் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் ராக்கி பாய் அப்செட்
KGF 2 Movie : பீஸ்ட் படத்தின் வருகையால் தமிழகத்தில் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழ் புத்தாண்டை ஒட்டி இரண்டு பிரம்மாண்ட படங்கள் ரிலீசாக உள்ளன. அதன்படி நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படமும், யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படமும் அடுத்தடுத்த நாளில் திரைகாண உள்ளன. இந்த இரண்டு படங்களும் பான் இந்தியா படங்களாக ரிலீசாக உள்ளன. அதனால் இதற்கான எதிர்பார்ப்பு அனைத்து மொழிகளிலும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள கே.ஜி.எஃப் 2 படத்தை தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார்.
பீஸ்ட் படத்தின் வருகையால் தமிழகத்தில் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. பீஸ்ட் படத்துக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்து வருகிறார்களாம். தமிழகத்தில் 800 முதல் 850 தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதே வேளையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழகத்தில் 200 முதல் 250 தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாக உள்ளதாம். வட மாநிலங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படத்துக்கு தமிழகத்தில் 300 திரையரங்குகள் கூட கிடைக்காததால் படக்குழு அப்செட் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate : நள்ளிரவில் நடந்த எவிக்ஷன்... பைனல்ஸ் வாய்ப்பை தவறவிட்டு கண்ணீருடன் விடைபெற்ற பிரபலம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.