- Home
- Cinema
- நெகட்டிவ் ரோலில் மாஸ் காட்டும் விஜய்சேதுபதி..டோலிவுட்டில் சூப்பர் ஹீரோவுடன் கைகோர்த்த மக்கள் செல்வன்!
நெகட்டிவ் ரோலில் மாஸ் காட்டும் விஜய்சேதுபதி..டோலிவுட்டில் சூப்பர் ஹீரோவுடன் கைகோர்த்த மக்கள் செல்வன்!
பேட்ட, மாஸ்டர், விக்ரம் என மாஸ் வில்லனாக ஒரு ரவுண்டு வரும் விஜய் சேதுபதிக்கு தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மவுசு கூடியுள்ளது.

vijay sethupathi
துணை வேடத்தில் துவங்கி இன்று முன்னணி நாயகர்களில் ஒருவராகி விட்ட மக்கள் செல்வனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் நாயகனாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தது. இதற்கிடையே தனது தோற்றத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இவர் தனக்கு வரும் ரோல்களை மறுக்காமல் அதில் தன்னால் முடித்த மாஸை காட்டி விடுகிறார். அந்தவகையில் விஜய் சேதுபதி வில்லன் வேடங்களில் தெறிக்கவிட்டு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு... மீண்டும் விஜய்யுடன் இணையும் சமந்தா..கன்பார்ம் செய்த லோகேஷ் கனகராஜ்!
vijay sethupathi
ரஜினிகாந்த், விஜய் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதிக்கு டோலிவுட்டில் அதிக வரவேற்பு உள்ளது. அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி கமிட் ஆவார் என தெரிகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள 'விக்ரம்' நேற்று வெளியாகி ரசிகர்களிடையே அனல் பரப்பி வருகிறது. அதோடு விஜய் சேதுபதி இப்போது தனது பாலிவுட் முதல் படமான 'மெர்ரி கிறிஸ்மஸ்' படப்பிடிப்பில் கத்ரீனா கைஃப் உடன் நடிக்கிறார். மேலும் வெற்றிமாறனின் விடுதலையில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... பட்டையை கிளப்பும் விக்ரம்..கமலின் முந்தைய படங்களின் வசூல் எவ்வளவு தெரியுமா?
vijay sethupathi
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, 'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் மற்றொரு நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளார். மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு , பூஜா ஹெக்டே நடிக்கும் படத்திற்காக விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.