வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி... இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா??
First Published Jan 6, 2021, 6:18 PM IST
சத்தமே இல்லாமல் விஜய் சேதுபதிக்கான லுக் டெஸ்ட் எல்லாம் எடுக்கப்பட்டு, தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடக்கும் ஷூட்டிங்கில் அவர் நடித்துவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்ததை அடுத்து ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

காமெடி நடிகராக திரையுலகை கலக்கி வரும் சூரி, இந்த படம் மூலமாக முதன் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளார். இந்த படத்திற்காக சூரி சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறிய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?