- Home
- Cinema
- ரூ.90 கோடி கலெக்ஷனோடு ஓடிடிக்கு வந்த தலைவன் தலைவி – மகாராஜாவிற்கு பிறகு இப்படியொரு மகுடமா?
ரூ.90 கோடி கலெக்ஷனோடு ஓடிடிக்கு வந்த தலைவன் தலைவி – மகாராஜாவிற்கு பிறகு இப்படியொரு மகுடமா?
Thalaivan Thalaivii Released on Amazon Prime OTT : விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஜோடி நடித்த சூப்பர் ஹிட் படம் தலைவன் தலைவி' ஓடிடியில் வெளியாகியுள்ளது. எந்த ஓடிடியில் படம் பார்க்கலாம், கதை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஓடிடியில் தலைவன் தலைவி
Thalaivan Thalaivii Released on Amazon Prime OTT : விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நித்யா மேனனும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இருவரும் இணைந்து நடித்த தலைவன் தலைவி கடந்த ஜூலை 25ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. தெலுங்கில் 'சார் மேடம்' என்ற பெயரில் இப்படம் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம், ஒரு மாதத்திற்குள் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
90 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படம்
ஆகஸ்ட் 22ஆம் தேதி இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். தமிழில் திரையரங்குகளில் வெளியாகி 90 கோடி வரை வசூலித்தது. 25 கோடி பட்ஜெட்டில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியத்தில் வெளியான இந்தப் படம் குடும்பக் கதையை மையப்படுத்தி வெளியானது.
தலைவன் தலைவி கதை
விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரின் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். கதையில், கிராமத்தில் ஹோட்டல் நடத்தும் விஜய் சேதுபதிக்கு நித்யா மேனனுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், மாப்பிள்ளை வீட்டின் பின்னணியைப் பார்த்து பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்த நினைக்கின்றனர். ஆனால், காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர்.
குடும்பப் பார்வையாளர்களுக்கு விருந்து
பின்னர் வழக்கமான அத்தை மருமகள் பிரச்சனை தொடங்குகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படுகிறது. நித்யா மேனன் அடிக்கடி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்றுவிடுவார். விஜய் சேதுபதி சமாதானப்படுத்தி அழைத்து வருவார்.
ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை செல்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் பிரிந்தார்களா? அல்லது ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை. இயக்குநர் பாண்டிராஜ் அனைவருக்கும் தெரிந்த குடும்பப் பிரச்சனையை அழகாகக் கையாண்டுள்ளார். நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், பொழுதுபோக்கு என அனைத்தும் கலந்த படம். குடும்பப் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்த படமாக அமைந்துள்ளது.