Maamanithan : பாக்ஸ் ஆபிஸில் டல் அடித்த விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?
Maamanithan Day 1 box office collection : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமனிதன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோருடன் இணைந்து இவர் நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையடுத்து கடந்த ஜூன் 3-ந் தேதி இவர் நடித்த விக்ரம் திரைப்படம் ரிலீசானது. இப்படத்தில் சந்தானம் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் உலகமெங்கும் அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த விஜய் சேதுபதி நடிப்பில், நேற்று மாமனிதன் படம் ரிலீசானது. சீனு ராமசாமி இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இப்படத்திற்கு இணைந்து இசையமைத்திருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களுக்கு பின் வெளியாவதால் இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்படம் முதல் நாளில் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. குறைந்த அளவிலான தியேட்டர்கள் கிடைத்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் முதல் நாளில் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Rashmika : என் நாய்க்கும் ஃபிளைட் டிக்கெட் போட்டா தான் ஷூட்டிங் வருவேன்... உண்மையை ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா