Rashmika : என் நாய்க்கும் ஃபிளைட் டிக்கெட் போட்டா தான் ஷூட்டிங் வருவேன்... உண்மையை ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா
Rashmika Mandanna : தன்னோடு சேர்த்து தனது நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் ஷூட்டிங் வருவேன் என நடிகை ராஷ்மிகா தயாரிப்பாளர்களிடம் கறாராக சொல்லிவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கிய தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ராஷ்மிகாவுக்கு கோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் இருந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இந்தியில் இவர் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, மற்றும் அனிமல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புஷ்பா 2 படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, படப்பிடிப்புக்காக அடிக்கடி விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளதாம். அந்த சமயத்தில் தனது செல்ல நாய்க்குட்டியையும் அவர் கூடே அழைத்து செல்வதாகவும், தன்னோடு சேர்த்து தனது நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் ஷூட்டிங் வருவேன் என அவர் தயாரிப்பாளர்களிடம் கறாராக சொல்லிவிட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து கடுப்பான நடிகை ராஷ்மிகா, “நீங்களே என் நாய்க்குட்டியை என்னுடன் பயணிக்க சொன்னாலும் அது வராது. அது ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் சந்தோஷமாக உள்ளது. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி” என டுவிட்டர் வாயிலாக விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ப்ளீஸ்... பிகினி போட்டோ அனுப்புங்கனு கெஞ்சி கேட்ட ரசிகர் - உடனடியாக போட்டோ அனுப்பி ஷாக் கொடுத்த மாளவிகா