சீனாவில் விஜய் சேதுபதியின் மகாராஜா 40 கோடி வசூல்!!
Maharaja in China : பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்ற படம் தான் மகாராஜா. இப்பொது சீனாவிலும் அந்த படம் வெளியாகியுள்ளது.
Maharaja in china
இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் மகாராஜா. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. ஏற்கனவே தற்போது உலக அளவில் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்த மகாராஜா திரைப்படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியாகி இருக்கிறது. சீன மொழி திரைப்படங்களோடு போட்டியிட்டு வரும் மகாராஜா, இப்போது அந்நாட்டில் டாப் 5 லிஸ்டில் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால் முதல் கீர்த்தி சுரேஷ் வரை; நண்பர்களையே காதலித்த தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட்!
Maharaja Movie
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விதார்த் மற்றும் மூத்த தமிழ் திரையுலக இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் வெளியான "குரங்கு பொம்மை" என்கின்ற த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இயக்குனர் தான் நிதிலன் சுவாமிநாதன் .கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து அவர் பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் இயக்குனர் நிதிலனை நேரில் அழைத்து பாராட்டியது அனைவரும் அறிந்ததே.
Rajinikanth
இந்த சூழலில் ஏற்கனவே இந்திய அளவில் பல திரையரங்குகளில் 5 வாரங்களைக் கடந்து ஓடிய மகாராஜா திரைப்படம் தற்பொழுது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இருக்கின்றது. இதற்கிடையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியான மகாராஜா திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. சீன மொழி திரைப்படங்களோடு போட்டியிட்டு வரும் மகாராஜா திரைப்படம் டாப் 5 லிஸ்டில் தற்பொழுது இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
Vijay Sethupathi
அது மட்டுமல்லாமல் மகாராஜா திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 32,621 காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை பிரிவியூ காட்சியோடு சேர்த்து சுமார் 40 கோடி ரூபாய் வசூல் செய்து சீனாவிலும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி வருகிறது மகாராஜா. தற்போது இந்தப் படத்தை ஜப்பானிலும் வெளியிட குழு தயாராகி வருகிறது.
ஒரே ஆண்டில் 35 படங்கள்; இன்றும் பல சாதனை படைக்கும் அந்த தென்னக நடிகர் யார் தெரியுமா?