சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!
Vijay Sethupathi Likely to Join With Siruthai Siva : கங்குவா படத்திற்கு பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகி வரும் செய்திக்கு பிரபல நடிகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!
Vijay Sethupathi Likely to Join With Siruthai Siva : கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் சிவா. இந்த படம் கொடுத்த அடையாளத்தின் மூலமாக சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்தப் படத்திற்கு பிறகு வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். கடைசியாக நடிகர் சூர்யா உடன் இணைந்து கங்குவா படத்தை இயக்கினார். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் சூர்யா இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனத்தை இந்தப் படம் பெற்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!
சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் படத்தின் கதை மற்றும் அதிக சத்தம் என்று பலவிதமான குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டது. கடைசியில் சூர்யாவின் நடிப்பில் இந்தப் படம் மறக்க முடியாத தோல்விப் படமாக அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா இப்போது ரெட்ரோ மற்றும் சூர்யா45 படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று கங்குவா படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா நடிகர் அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுக்க இருந்தார். ஆனால், கங்குவா கொடுத்த தோல்வி காரணமாக அஜித் அந்த படத்திலிருந்து பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யாரும் சிறுத்தை சிவாவிற்கு கால்ஷீட் கொடுக்க முன்வராத நிலையில் விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!
இந்தநிலையில் தான் நடிகர் சித்ரா லட்சுமணன் இது குறித்து பேசியிருக்கிறார். அதில், சிறுத்தை சிவா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கோயிலுக்கு சென்ற போது ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். இதுமட்டும் தான் நடந்தது. ஆனால், இருவரும் ஒன்றாக படம் பண்ணவில்லை என்று கூறியுள்ளார். இதனை நான சொல்ல காரணமாக இது குறித்து விஜய் சேதுபதியே என்னிடம் கூறியிருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் பாகத்தை விட 2ஆம் பாகம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து காந்தி டாக்கீஸ், ஏஸ் மற்றும் டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.