- Home
- Cinema
- vijay sethupathi :1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! சைலன்டாக சாதித்து காட்டிய விஜய்சேதுபதிக்கு குவியும் பாராட்டு
vijay sethupathi :1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! சைலன்டாக சாதித்து காட்டிய விஜய்சேதுபதிக்கு குவியும் பாராட்டு
vijay sethupathi : சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சைலண்டாக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மூலம் அறிமுகம்
சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இப்படம் தேசிய விருது வென்றதோடு, விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
வில்லன் வேடங்களுக்கு மவுசு
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் விஜய் சேதுபதி. அந்த வகையில் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இவர் வில்லனாக நடித்த மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.
குவியும் பிற மொழி பட வாய்ப்புகள்
இவர் தமிழ் தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் இவர் நடிப்பில் 3 திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அதில் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கும் ஒன்று. மும்பைக்கார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
1 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு
இவ்வாறு சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சைலண்டாக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்காக வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அவரின் இந்த சேவைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... RRR movie : ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை அடிச்சுதூக்கி கெத்து காட்டும் ‘ஆர்.ஆர்.ஆர்’