- Home
- Cinema
- 250 பேருக்கு வீடு..! தல - தளபதியை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி! உதவுவதில் மனுஷன் கர்ணனா இருக்காரே..!
250 பேருக்கு வீடு..! தல - தளபதியை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி! உதவுவதில் மனுஷன் கர்ணனா இருக்காரே..!
நடிகர் விஜய் சேதுபதி 250 பேருக்கு வீடு கட்ட உதவி செய்தது குறித்து, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ள தகவல், ரசிகர்களுக்கு அவர் மீதான அன்பையும், மரியாதையையும் அதிகரிக்க செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் அஜித் - விஜய் போன்ற நடிகர்கள், ஊர் உலகத்திற்கு தெரியாமல் பல உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கூட தங்களுடைய ஒவ்வொரு படத்திற்கும் உறுதுணையாக இருந்து வரும் பெப்சி தொழிலாளர்கள் குறித்து பெரிதாக கண்டு கொள்வதில்லை. அவசர காலங்களில் மட்டுமே ஏதேனும் சிறு சிறு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் அஜித் - விஜய் போன்ற பிரபலங்களை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு தற்போதைய முன்னணி நடிகரும், முன்னணி வில்லனுமான... விஜய் சேதுபதி செய்துள்ள உதவி குறித்து ஆர் கே செல்வமணி கூறியுள்ள தகவல் அவரது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
மக்கள் செல்வன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, எப்போதுமே மிகவும் எதார்த்தமான மனிதராகவே இருப்பவர். முன்னணி நடிகர் என்றாலும், அந்த தலைக்கனத்தோடு எப்போதுமே நடந்து கொண்டது இல்லை. அனைவரிடமும் பண்போடும், அன்போடும், பழகுபவர். அதே போல் தன் மீது பாசத்தை அள்ளிக் கொடுக்கும் ரசிகர்களுக்கு, கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்து அவர்கள் மீது இரட்டிப்பு பாசத்தை காட்டுபவர். இதுவே இவரது தனி ஸ்டைல் ஆகவும் உள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விஜய் சேதுபதி,வில்லனாக நடிப்பதிலும் கெத்து காட்டி வருகிறார். இவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. இவருடைய ஹீரோ சப்ஜெக்ட் படங்களை பார்க்க இருக்கும் ரசிகர்களை விட, வில்லன் சப்ஜெக்டில் நடிக்கும் படத்தை பார்ப்பதற்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர்.
பேசியே ஜீரோவாகிறார் ரஜினிகாந்த்..! சூப்பர் ஸ்டாரை தாறுமாறான தாக்கி பேசிய நடிகை ரோஜா!
மேலும் சமீப காலமாக விஜய் சேதுபதி, வில்லனாகவே அதிகம் மிரட்டி வருவதாகவும்... மீண்டும் தான் ஒரு ஹீரோ என்பதை உணர்ந்து, அவர் கதாநாயகனாக நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அவருடைய ரசிகர்கள் அன்பு கட்டளை போட்டு வருகின்றனர். எனவே விஜய் சேதுபதியும், அடுத்தடுத்து சில வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் ஹீரோவாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.அந்த வகையில், விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால், இந்த படம் டிராப்பானதாகவும்... எனவே அடுத்தடுத்து மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
திரைப்படங்கள் மட்டும் மின்றி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதே போல் மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்துகிறார்.
எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்தவர் அஜித்..! தல-யை ரசிகர்கள் கொண்டாடவும் இது தான் காரணம்!
இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்த பிரபல இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி கூறியுள்ள தகவல் விஜய் சேதுபதி மீதான மரியாதையை மேலும் உயர்த்தும் விதத்தில் உள்ளது. ஆர் கே செல்வமணி ஒரு முறை விஜய் சேதுபதியை சந்தித்து பேசுகையில், பெப்சி யூனியன் பணிபுரியும் தொழிலாளர்கள் 250 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த பண பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக விஜய் சேதுபதி 250 பேருக்கு, தலா ஒருவருக்கு 50,000 என்கிற வீதம் கொடுத்து உதவியுள்ளார்.
அதிலும் 30 லட்சம் தேவைப்படவே... இது குறித்து மீண்டும் விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், உடனடியாக மறுநாளே தேவையான பணத்தை தன்னுடைய உதவியாளர் மூலம் விஜய் சேதுபதி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது மட்டும் இன்றி, அவரின் உதவும் மனதை நினைத்து பெருமைப்பட வைத்துள்ளது.
கழுத்தை நெரிந்த கடன்..! பிரபல நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!