பிரபல நடிகரின் பெயரில் மாஸ் காட்டும் மக்கள் செல்வன்..விக்ரமில் விஜய்சேதுபதி கேரக்டர்..
கமல்ஹாசன் தற்போது நடித்த்து முடித்துள்ள விக்ரம் படத்தின் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

vikram movie
நான்கு வருட இடைவெளிக்கு பிறகு உருவாகியுள்ள விக்ரம் படுத்தில்ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
vikram
1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தில் கமல் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் தாறுமாறாகா ப்ரோமோஷன் செய்து வருகிறது.
vikram
விக்ரம் படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது இந்நிலையில் இந்த படத்தின் கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகி வருகிறது. அதன்படி நேற்று பகத்பாசில் பெயர் போஸ்டரோடு வெளியானது. அதில் வில்லனாக வரும் பக்கத்தின் பெயர் அமர் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.
vikram
இந்நிலையில் விக்ரம் படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சந்தானம் என்னும் பெயரில் வரும் மக்கள் செல்வன் கேங்ஸ்டராக வருகிறார் என சொல்லப்பட்டுள்ளது.