- Home
- Cinema
- Vijay Sethupathi: சைலண்டா நடந்து முடிந்த ஷூட்டிங் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அப்டேட்!
Vijay Sethupathi: சைலண்டா நடந்து முடிந்த ஷூட்டிங் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அப்டேட்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

தமிழ் சினம் செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய சேதுபதி, கடைசியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 'லவ் பேர்ட்ஸ்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்திருந்தார். சுந்தபாண்டியன் படம் தான் அவரது கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது.
விஜய் சேதுபதியின் படங்கள்:
அதன் பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், ஜிகர்தண்டா, பெஞ்ச் டாக்கீஸ், றெக்க, கவண், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், விடுதலை 1, விடுதலை 2, மகராஜா என்று ஏராளமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் சேதுபதி; எந்த படம்?
இயக்குநர் பாண்டிராஜ்
இந்த நிலையில் தான் இந்தப் படங்கள் தவிர இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். சைலண்டாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். யோகி பாபு, செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன்
இந்தப் படத்தின் டைடிட்ல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் தொடர்பாக அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளிவரும் என்று எதிர்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழரை சனி புடிச்சிருக்கு; சினிமாவை விட்டு போக சொன்னாங்க! விஜய் சேதுபதி ஓபன் டாக்