MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் சேதுபதி; எந்த படம்?

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் சேதுபதி; எந்த படம்?

விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தான் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Feb 16 2025, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அஜித்துடன் விஜய் சேதுபதி

அஜித்துடன் விஜய் சேதுபதி

தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், அடுத்தடுத்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என எது கொடுத்தாலும் அதில் நடித்து அப்ளாஸ் வாங்கிவிட்டு சென்றார். குறிப்பாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்துவிட்ட விஜய் சேதுபதி, இதுவரை அஜித்துடன் மட்டும் வில்லனாக நடிக்கவே இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

அஜித்துடன் மட்டும் விஜய் சேதுபதி நடிக்காதது ஏன் என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பெரம்பலூரில் உள்ள கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், அஜித்துடன் எப்போ நடிப்பீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுவரைக்கு நடந்த எதுவுமே நான் திட்டமிட்டு நடக்கவில்லை. எதாச்சும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என நான் நினைக்கிறேன். இதற்கு முன் நடப்பதாக இருந்தது ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது. விரைவில் நடக்கும் என நான் நம்புகிறேன் என கூறினார்.

இதையும் படியுங்கள்... ஏழரை சனி புடிச்சிருக்கு; சினிமாவை விட்டு போக சொன்னாங்க! விஜய் சேதுபதி ஓபன் டாக்

34
அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி

அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி

இருப்பினும் எந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் விஜய் சேதுபதி. முன்னதாக அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே கைவிடப்பட்டது. அப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் நடக்காமல் போனதை தான் சூசகமாக சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி.

44
விஜய் சேதுபதிக்கு பிடித்த வில்லன்

விஜய் சேதுபதிக்கு பிடித்த வில்லன்

மேலும் அந்த கல்லூரி விழாவில், விஜய் சேதுபதியிடம், உங்களுக்கு ஹீரோவாக நடிப்பது புடிக்குமா என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், எல்லாமே கேரக்டர்கள் தான். ஆனால் அதில் வில்லனாக நடிப்பது புடிக்கும். ஏனெனில் அதில் நிறைய சுதந்திரம் இருக்கும். வில்லனுக்கென ஒரு வரையறையே இருக்காது. ஆனால் ஹீரோ என்றால் ஒரு வரையறை இருக்கும் அதைமீறி நம்மால் நடிக்க  முடியாது என ஓப்பனாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... கேப்டனின் ஜெராக்ஸ் காப்பியாக மாறிய ‘பிக் பாஸ்‘ விஜய் சேதுபதி! என்ன செஞ்சிருக்காரு பாருங்க?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் சேதுபதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved