புதிய ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதியின் மாமனிதன்..எப்ப ரிலீஸ் தெரியுமா?
கடந்த ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமனிதன் படம் மிதமான வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையே இதன் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
vijay sethupathi
தமிழ் சினிமாவில் புயல் என வளர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நாயகனாக உருவெடுத்துள்ளார். காரணம் இவரின் கதாபாத்திர தேர்வு தான். கதாநாயகனாக மட்டும் நடித்துவிட்டு போகலாம் என்ற எண்ணம் இல்லாமல் சிறப்பு வேடம், வில்லன் என வரும் பாத்திரங்கள் அனைத்திலும் நடித்து மாஸ் கட்டி வருகிறார்.
vijay sethupathi
தற்போது சூரி நாயகனாக நடிக்கும் விடுதலைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதோடு பாலிவுட்டில் ஒரு படமும் , ஷாருக்கானுக்கு வில்லனாகவும், தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..கார்த்திக்கு வில்லனாக நடிக்க முடியாது..விஜய் சேதுபதியின் முடிவால் அப்செட் ஆன படக்குழு!
vijay sethupathi
இறுதியாக இவர் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. முன்னதாக பேட்ட படத்தில் ரஜினிக்கும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது கமலுடன் இந்த படத்தில் தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..அரசர்கள் புடை சூழ அரங்கேறிய பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சி ! கலர்புல் போட்டோஸ் இதோ..
MAAMANITHAN
ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த மாமனிதன் ரிலீஸ் ஆனது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தனது சொந்த பேனரில் தயாரித்திருந்தார். விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் மஉள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
MAAMANITHAN
இளையராஜா யுவன் சங்கர் ராஜா என இருவரும் இந்த படத்திற்காக இசை அமைத்திருந்தனர் படம் இளையராஜாவிற்காக பண்ணை புறத்தில் தெருக்களிலும் இசைஞானி இளையராஜாவின் வீட்டு சுற்றுப்புறத்திலும் படமாக்கப்பட்டது அதோடு கேரளாவிலும் வாரணாசிகளும் இதன் சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு..பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!
maamanithan
கடந்த ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமனிதன் படம் மிதமான வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையே இதன் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய புதிய தகவலாக வரும் 15ஆம் தேதி இந்த ஓடிடி தளத்தில் மாமனிதன் வெளியாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.