- Home
- Cinema
- ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு.. உச்சநீதிமன்றத்திலும் விஜய்க்கு செக்.. என்ன நடந்தது?
ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு.. உச்சநீதிமன்றத்திலும் விஜய்க்கு செக்.. என்ன நடந்தது?
ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காத விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், இப்போது அங்கும் விஜய்க்கு செக் வைக்கும் வகையில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜனநாயகன் பட விவாகரம்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட விவாகரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இப்போது சென்சார் போர்டும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதாவது ஜனநாயகன் விவகாரத்தில் சென்சார் சான்றிதழ் தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
உயர்நீதிமன்றம் அதிரடி
முன்னதாக ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜனநாயகனுக்கு உடனே சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டார்.
தணிக்கை வாரியம் அதனை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்தனர்.
உச்சநீதிமன்றத்திலும் விஜய்க்கு செக்
மேலும் விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஜனநாயகன் படம் வெளியிட முடியாமல் உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்றது. இப்போது அங்கும் விஜய்க்கு முட்டுக்கட்டை போடும் சென்சார் போர்டு புது மனுத்தாக்கல் செய்துள்ளது ஜனநாயகனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

