- Home
- Tamil Nadu News
- ஜனநாயகன் விஜய்க்காக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. பரபரப்பு ட்வீட்.. திடீர் ட்விஸ்ட்!
ஜனநாயகன் விஜய்க்காக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. பரபரப்பு ட்வீட்.. திடீர் ட்விஸ்ட்!
விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு
தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இன்று (ஜனவரி 9) வெளியாக இருந்தது. ஆனால் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் சென்ற நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்க இன்று காலை உத்தரவிட்டது.
சென்சார் சர்டிபிகேட் வழங்கவில்லை
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஜனநாயகன் திரைப்படம் வரும் 21ம் தேதி வரை ரிலீஸ் செய்ய முடியாது.
விஜய்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் கருத்து
இந்த நிலையில், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்'' என்று கூறியுள்ளார்.

