- Home
- Cinema
- SA Chandrasekar :பீஸ்ட் படம் பார்த்து.. நெல்சனை பொளந்துகட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
SA Chandrasekar :பீஸ்ட் படம் பார்த்து.. நெல்சனை பொளந்துகட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
SA Chandrasekar : இப்போதுள்ள இயக்குனர்கள் கதையை ஒரு லைனில் சொல்லி ஹீரோவிடம் ஓகே வாங்கி விடுகிறார்கள், ஆனால் திரைக்கதையில் கோட்டைவிட்டு விடுகின்றனர் என எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி ரிலீஸானது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. இப்படம் ரிலீசானது முதல் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. பிரபலங்களும் இப்படம் குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பீஸ்ட் படம் குறித்து இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பதாவது: அரபிக் குத்து பாட்டு வரை பீஸ்ட் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது விஜய்யை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட ஒரு படமாக உள்ளது. தற்போதுள்ள இளம் இயக்குனர்கள், முதல் இரண்டு படங்களை கடின உழைப்பை கொடுத்து எடுத்துவிடுகிறார்கள். அதன்பின் பெரிய நடிகர்களின் படங்கள் அவர்களுக்கு ஈஸியாக கிடைத்துவிடுகின்றன.
பெரிய ஹீரோ கிடைத்தவுடன் நாம் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துவிடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். 2 பாட்டு 5 சண்டைக் காட்சிகள் வச்சி படம் பண்ணினால் போதும் என நினைக்கிறார்கள். ஒரு இயக்குனர் நினைத்தால் திரைக்கதையில் தான் மேஜிக் பண்ண முடியும். சர்வதேச அளவில் ஒரு கனமான விஷயத்தை படத்தில் சொல்ல வரும்போது அதற்காக இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு ஹீரோ கிடைச்சிட்டாரு... ஷூட்டிங் போயிடலாம்னு இப்படிப்பட்ட கதையெல்லாம் படமாக்க முடியாது. இப்போதுள்ள இயக்குனர்கள் கதையை ஒரு லைனில் சொல்லி ஹீரோவிடம் ஓகே வாங்கி விடுகிறார்கள், ஆனால் திரைக்கதையில் கோட்டைவிட்டு விடுகின்றனர். பீஸ்ட் படத்துல நான் பார்த்தது, ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார், ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இருக்கிறார், ஒரு டான்ஸ் மாஸ்டர் இருக்கிறார், ஒரு எடிட்டர் இருக்கிறார், ஒரு ஹீரோ இருக்கிறார் ஆனால் இயக்குனர் மட்டும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... Yash : ‘களவாணி’ படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா....! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்