- Home
- Cinema
- Yash : ‘களவாணி’ படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா....! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Yash : ‘களவாணி’ படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யாஷ் நடிச்சிருக்காரா....! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
yash : கே.ஜி.எஃப் படத்தின் மூலம் மாஸான நடிகராக வலம் வரும் யாஷ், அப்படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் யாஷ் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு அவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும், அவரை பாப்புலர் ஆக்கியது கே.ஜி.எஃப் படம் தான். பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பட்டி தொட்டியெங்கு ஹிட் ஆனது. இப்படம் மூலம் இந்தியா முழுவதும் பேமஸ் ஆனார் யாஷ்.
கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் என்கிற டான் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த யாஷ், தற்போது வெளியாகி இருக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகம் மூலம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார். அப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படி மாஸான நடிகராக வலம் வரும் யாஷ், கே.ஜி.எஃப் படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று தான் கிராடகா, இது தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான களவாணி படத்தின் கன்னட ரீமேக் ஆகும். இப்படத்திலும் யாஷுக்கு ஜோடியாக ஓவியா தான் நடித்திருந்தார்.
தமிழில் ஓவியாவுடன் விமல் ரொமான்ஸ் செய்ததைப் போல் கன்னடத்தில் யாஷ் செய்துள்ளார். அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதைப்பார்த்து ராக்கி பாயா இது என கேட்கும் அளவுக்கு அவரது கெட் அப்பும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.
இதையும் படியுங்கள்... Yuvan shankar Raja : ‘கருப்பு திராவிடன்’ என மாஸ் காட்டிய யுவன் சங்கர் ராஜா... வைரல் பதிவால் தெறிக்கும் இன்ஸ்டா