ச்ச... இப்படி பண்ணிட்டாங்களே... 3 போஸ்டர்லையும் அது இல்ல - வாரிசு படக்குழு மீது விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்
Varisu : விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக வாரிசு படக்குழு அப்படத்தின் 3 போஸ்டர்களை வெளியிட்டது. இத்தனை போஸ்டர்கள் வெளியிட்டும் வாரிசு படக்குழு மீது விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தளபதி 66 படத்துக்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக குடும்ப செண்டிமெண்ட் உடன் தயாராகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார். வாரிசு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர்.
நேற்று நடிகர் விஜய் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் விஜய் தனது பிறந்தநாளை வாரிசு படக்குழுவுடன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார்.
விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக வாரிசு படக்குழு அப்படத்தின் 3 போஸ்டர்களை வெளியிட்டது. இத்தனை போஸ்டர்கள் வெளியிட்டும் வாரிசு படக்குழு மீது விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம். ஏனெனில், இந்த படத்துக்கு வாரிசு என அழகான தமிழ் பெயரை வைத்துவிட்டு, வெளியிட்ட 3 போஸ்டர்களிலும் தலைப்பு தமிழில் இடம்பெறாதது அவர்களை அப்செட் ஆக்கி உள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இது சும்மா டிரைலர் தான்... இன்னும் நிறையா இருக்கு..! அடுத்தடுத்து ஹனிமூன் ட்ரிப் செல்ல உள்ள விக்கி - நயன் ஜோடி