திரையுலகில் 30 வருடத்தை நிறைவு செய்த தளபதி..! உதவி செய்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்..!
தளபதி விஜய் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சாலையோரம் வசிப்பதர்களுக்கு உதவிகள் செய்து, தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தவர் விஜய். இவருடைய தந்தை எஸ்.ஏ.சி இயக்குனர் என்பதால் எளிதாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், தற்போது அவர் எட்டி இருக்கும் உச்சத்தையும், ரசிகர்கள் மனதையும் கவர, பல விமர்சனங்களையும், சவால்களையும் கடந்து தான் வந்துள்ளார்.
குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தனக்கான ரசிகர்கள் வட்டத்தை உருவாகுவது என்பது எளிதான காரியம் இல்லை. ரசிகர்களின் அன்பாலும்... ஆதரவாலும், மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ள விஜய் தற்போது திரையுலகில் காலடி எடுத்து வைத்து 30 வருடங்கள் ஆகியுள்ளது.
இதனை தளபதியின் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருவது ஒருபுறம் இருக்க... விஜய் ரசிகர்களுக்காக, 'வாரிசு' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலையும் வெளியிட உள்ளதாக படக்குழுவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விஜய் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் நிறைவு செய்ததை சிறப்பிக்கும் விதமாக, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி செம்பாக்கம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 50 பேருக்கு உதவிகள் செய்துள்ளனர்.
அதிர்ச்சி.. வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!
தற்போது குளிர்காலம் என்பதால், சாலையோர வசிக்கும் ஏழை மற்றும் ஆதரவற்ற மக்கள் 50 பேருக்கு போர்வைகள் வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயல், அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.