காதலனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு.. கடற்கரை பக்கத்தில் புது வீடு வாங்கிய தகவலை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்!
நடிகை பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் செய்தபடி கடற்கரை பக்கத்தில் புதிய வீடு வாங்கிய தகவலை அறிவித்துள்ளார். மேலும் இவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள தகவலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே, அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பைப் பெற்று முன்னணி நடிகை என்கிற இடத்தை நோக்கி நகர்ந்து வருபவர் பிரியா பவானி சங்கர்.
தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள், முதலுக்கு மோசம் இல்லாத வகையில்... வெற்றி பெற்றதால், ராசியான நடிகை என பெயரெடுத்து விட்டார். எனவே இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் அணுகி வருகின்றனர். மேலும் தனுஷ், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அதிர்ச்சி.. வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!
சிறு கதாபாத்திரம் என்றாலும் அழுத்தமான ரோலை தேர்வு செய்து நடிக்கும் பிரியா பவானி ஷங்கர், தற்போது மகிழ்ச்சிகரமான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர, பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிரியா பவானி சங்கர், தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருவது அனைவரும் அறிந்தது தான். இதனை அவரே பலமுறை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
அதாவது தன்னுடைய 18 வயதில் இருந்தே கடற்கரையை பார்த்து ரசித்தபடி ஒரு இடத்தை வாங்க நினைத்தோம். தங்களின் மாலை பொழுது கடலில் இருந்து எழும் சந்திரனை பார்த்தபடி இருக்க வேண்டும், எனவே அந்த ஆசை நிறைவேறும் விதமாக, கடற்கரையை ஒட்டி ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக... பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், காதலனுடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
பிரியா பவானி ஷங்கரின், இந்த பதிவுக்கு நடிகை மஞ்சிமா மோகன், தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன், நடிகர் சிரீஷ், விஜே விஜய், திவ்யா சத்யராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Exclusive: கடைசி நேரத்தில் ஹரி வைரவனுக்கு என்ன நடந்தது? கதறும் மனைவி கவிதா..!
அதேபோல் பிரியா பவானி ஷங்கர் மனதை கொள்ளை கொள்ளும் எளிமையான சேலை அழகில், தலையில் மல்லி பூ வைத்தது தன்னுடைய காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. வீடு வாங்கிய கையேடு திருமண செய்தியையும் பிரியா பவானி ஷங்கர் சொல்ல வேண்டும் என்பதை ரசிகர்கள் பலரின் எதிர்பாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.