காதலை உறுதி செய்த 'என்ஜாய் எஞ்சாமி' பாடகர் தெருக்குரல் அறிவு..! அட இவர் தான் காதலியா? வைரலாகும் புகைப்படம்!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி உலக அளவில் பலரது ஃபேவரட் பாடலாக மாறிய, 'என்ஜாய் என்ஜாமி' பாடலை எழுதி பாடிய தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலை உறுதி செய்து, காதலி யார் என்பதை அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், அவருடைய மகள், ரவுடி பேபி பாடல் புகழ் தீ மற்றும் இன்டிபென்டன்ட் பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி, நடித்திருந்த ஆல்பம் பாடலான 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி, உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதை தொடர்ந்து தற்போது வெளிநாடு மற்றும் தமிழகத்தில் பல்வேறு இசை கச்சேரிகளில், பின்னணி பாடகராகவும் வலம் வரும், தெருக்குரல் அறிவு தற்போது முதல் முறையாக தன்னுடை காதலி யார் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
Exclusive: கடைசி நேரத்தில் ஹரி வைரவனுக்கு என்ன நடந்தது? கதறும் மனைவி கவிதா..!
கல்பனா என்பவரை சில வருடங்களாக காதலித்து வரும் இவர், தற்போது அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், ஒன்றாக மைல்கள்.. நாம் நம் முன்னோர்களின் வன்மையான அன்பு என கூறி கல்பனாவை டேக் செய்து என் திமிரான தமிழச்சி என காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தெருக்குரல் அறிவு தற்போது தன்னுடைய காதலை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ள பதிவுக்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய காதலி கல்பனாவின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா..! கனவுக்குள் நுழைகிறேன் சோஹைல் கதுரியா வெளியிட்ட வீடியோ!