அதிர்ச்சி.. வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!

நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறின் இயக்கத்தில் நடித்து வரும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், ஸ்டென்ட் பயிற்சியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Shocking accident in vetrimaran direct viduthalai movie shooting spot

தமிழ் சினிமாவில்,  பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் கலக்கி வந்த சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தற்போது வரை படப்பிடிப்பு முடிவடையாமல், படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

Shocking accident in vetrimaran direct viduthalai movie shooting spot

இதுவரை திண்டுக்கல், சிறுமலை, கொடைக்கானல், சென்னை போன்ற பல இடங்களில்,  'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னையில் படக்குழுவினர் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். வெற்றிமாறன் மற்ற சில படங்களிலும் கவனம் செலுத்தி வருவதால், இந்த படத்தின் படப்பிடிப்பு... இடைவெளி விட்டு விட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

காதலை உறுதி செய்த 'என்ஜாய் எஞ்சாமி' பாடகர் தெருக்குரல் அறிவு..! அட இவர் தான் காதலியா? வைரலாகும் புகைப்படம்!

Shocking accident in vetrimaran direct viduthalai movie shooting spot

இந்த படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் விடுதலை படத்தில் வரும் முக்கிய சண்டை காட்சி சென்னை கேளம்பாக்கத்தில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், சண்டை பயிற்சியாளரின் ரோப் கயிறு அறுந்து விழுந்ததில், ஸ்டென்ட் பயிற்சியாளர், சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு, சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா..! கனவுக்குள் நுழைகிறேன் சோஹைல் கதுரியா வெளியிட்ட வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios