MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிப்ரவரி 20-ல் விஜய் படம் ரிலீஸ் ஆவது உறுதி... தியேட்டர்களில் குவியக் காத்திருக்கும் ரசிகர்கள்

பிப்ரவரி 20-ல் விஜய் படம் ரிலீஸ் ஆவது உறுதி... தியேட்டர்களில் குவியக் காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி 20ந் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2026, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Movie Release on February 20
Image Credit : KVN Productions

Vijay Movie Release on February 20

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது. இப்படக்குழு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் வாங்கியதால், தற்போது ஜனநாயகன் திரைப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் பிப்ரவரி 20-ம் தேதி ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின் படி ஜனநாயகன் திரைப்படம் இம்மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இம்மாதம் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாவிட்டாலும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த மற்றுமொரு மாஸ் படம் திரைக்கு வருகிறது.

24
தெறி ரீ-ரிலீஸ்
Image Credit : X

தெறி ரீ-ரிலீஸ்

அந்தப் படம் வேறெதுவுமில்லை விஜய்யின் தெறி. இப்படம் பிப்ரவரி 20-ம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். பொங்கல் ரிலீஸ் படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், தெறி ரீ-ரிலீஸை ஜனவ்ரி 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் அப்போது வெளியாக இருந்த திரெளபதி 2 படக்குழுவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜனவரி 23-ந் தேதி தெறி படம் வெளியாகாது என அறிவித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.

Related Articles

Related image1
வழக்கை வாபஸ் வாங்கிய ஜனநாயகன் படக்குழு... சென்சார் போர்டின் அடுத்தக்கட்ட ஆக்‌ஷன் என்ன?
Related image2
Jananayagan: பாக்ஸ் ஆபிஸில் விழுந்த பெரும் ஓட்டை! 'ஜனநாயகன்' வராததால் தமிழ் சினிமாவிற்கு ரூ.100 கோடி நஷ்டமா?!
34
விஜய்யின் தெறி
Image Credit : instagram

விஜய்யின் தெறி

இந்த நிலையில், அப்படத்தை இம்மாதம் 20ம் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளனர். 2016-ல் வெளியான தெறி படம், பத்து வருடங்கள் நிறைவடையும் தருவாயில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. டிசிபி விஜயகுமார் மற்றும் ஜோசப் குருவிளா ஆகிய கதாபாத்திரங்களில் விஜய் நடித்த இந்த ஆக்‌ஷன் த்ரில்லரை அட்லீ இயக்கியுள்ளார். சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தெறி ஏற்கனவே பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் தெறி படம் 158 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது.

44
அதிகரிக்கும் ரீ-ரிலீஸ்
Image Credit : X

அதிகரிக்கும் ரீ-ரிலீஸ்

தற்போது தமிழ் சினிமாவில் வார வாரம் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, பழைய படங்கள் போட்டி போட்டு ரீ ரிலீஸ் ஆக தொடங்கி உள்ளன. குறிப்பாக நாளை காதலர் தினத்தை ஒட்டி நான்கு கிளாசிக் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று டி ராஜேந்தர் இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா திரைப்படம், மற்றொன்று, சூர்யாவின் மெளனம் பேசியது, மூன்றாவது படம் கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, நான்காவது படம் கதிர் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த காதலர் தினம். இப்படி தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது புதுப் படங்களின் வசூலை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வா வாத்தியாரின் மொத்த வசூலை.. 6 நாளில் எடுத்த வித் லவ்.. எத்தனை கோடி தெரியுமா?
Recommended image2
விஜயாவை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய சிந்தாமணி.! நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து குடும்பம்.! சிறகடிக்க ஆசை அப்டேட்.!
Recommended image3
அர்ஜுன் சத்யாவை வெளியேற்றுவதா? ஆடுகளம் சன் டிவி சீரியல் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
வழக்கை வாபஸ் வாங்கிய ஜனநாயகன் படக்குழு... சென்சார் போர்டின் அடுத்தக்கட்ட ஆக்‌ஷன் என்ன?
Recommended image2
Jananayagan: பாக்ஸ் ஆபிஸில் விழுந்த பெரும் ஓட்டை! 'ஜனநாயகன்' வராததால் தமிழ் சினிமாவிற்கு ரூ.100 கோடி நஷ்டமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved