MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay Movie Release : ஜனநாயகன் வரலேன்னு கவலைப்படாதீங்க! விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீசாகும் மெர்சல் மற்றும் ஜில்லா!

Vijay Movie Release : ஜனநாயகன் வரலேன்னு கவலைப்படாதீங்க! விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீசாகும் மெர்சல் மற்றும் ஜில்லா!

Vijay Movie Release : தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அவருடைய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 10 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
பிறந்தநாள் கொண்டாட்டம்
Image Credit : Chatgpt

பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தணிக்கை குழு தொடர்பான பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், விஜய்யின் பழைய ஹிட் படங்களை மீண்டும் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : எப்படி இருக்கு CM Vijay-யின் ஒரு மாதகால ஆட்சி? பாஸ் ஆயிட்டாரா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
ரீ-ரிலீஸாகும் படங்கள்
Image Credit : X/Films and Stuffs

ரீ-ரிலீஸாகும் படங்கள்

இதன்படி, ஜூன் 19-ஆம் தேதி விஜய்யின் இரண்டு முக்கிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகின்றன:

1. ஜில்லா: ஆர்.டி. நேசன் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இப்படத்தில் தளபதி விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடித்திருந்தார். காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

2. மெர்சல்: அட்லி இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் மிரட்டியிருப்பார். ஏ.ஆர். ரகுமான் இசையில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வணிக வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது விஜய் முதலமைச்சராக இருக்கும் சூழலில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருப்பது, விஜய் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் 'டபுள் ட்ரீட்' என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க : CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! - வீடியோ உள்ளே

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
திரைப்படம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Praggnanandhaa meets CM Vijay : CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! - வீடியோ உள்ளே
Recommended image2
CM Vijay Government : எப்படி இருக்கு CM Vijay-யின் ஒரு மாதகால ஆட்சி? பாஸ் ஆயிட்டாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved