MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிங்டம் பாக்ஸ் ஆபிஸ் : முதல் நாளே வசூலில் புது வரலாறு படைத்த விஜய் தேவரகொண்டா படம்

கிங்டம் பாக்ஸ் ஆபிஸ் : முதல் நாளே வசூலில் புது வரலாறு படைத்த விஜய் தேவரகொண்டா படம்

கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த பான் இந்தியா படமான கிங்டம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 01 2025, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kingdom box office collection day 1
Image Credit : instagram

Kingdom box office collection day 1

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் தேவரகொண்டா. சமீபகாலமாக பெரிய வெற்றிப் படங்கள் அவருக்கு இல்லை. அதனால் கிங்டம் படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருந்தார் விஜய் தேவரகொண்டா. ஜெர்சி போன்ற படங்களை இயக்கிய கௌதம் தின்னனூரி இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜோமோன் டி. ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் 4 சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம் மொழிகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கிங்டம் படம் எப்படி இருக்கு?
Image Credit : Instagram

கிங்டம் படம் எப்படி இருக்கு?

கிங்டம் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு மற்றும் அனிருத்தின் பின்னணி இசை தான் படத்தை தூக்கி பிடிப்பதாக பெரும்பாலானவர்கள் கூறி இருந்தனர்.

34
கிங்டம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
Image Credit : X/Sithara Entertainments

கிங்டம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

விமர்சனங்கள் சற்று கலவையாக வந்தாலும், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இதனால் கிங்டம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி உள்ளது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் கிங்டம் படைத்துள்ளது. அநேகமாக அடுத்த மூன்று நாட்களில் கிங்டம் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டிவிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

44
ஓவர்சீஸிலும் மாஸ் காட்டும் கிங்டம்
Image Credit : X/Gowtam Tinnanuri

ஓவர்சீஸிலும் மாஸ் காட்டும் கிங்டம்

கிங்டம் திரைப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரிலீசுக்கு முன்பே கைப்பற்றிவிட்டது. அதுவும் 53 கோடிக்கு இதன் ஓடிடி உரிமம் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே இமாலய வசூலை வாரிக்குவித்துள்ள கிங்டம் திரைப்படம் வீக் எண்டிலும் நல்ல கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளிநாடுகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. முதல் நாளே ஒரு மில்லியன் டாலர் வசூலித்த விஜய் தேவரகொண்டாவின் முதல் படம் இதுவாகும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
விஜய் தேவரகொண்டா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 First Review : வந்தாச்சு ஜெயிலர் 2 முதல் விமர்சனம்... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image2
'வாழு வாழ விடு தல'... எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்: ரேஸுக்கு ஆதரவு கேட்ட அஜித்தை வச்சு செய்யும் ரசிகர்கள்!
Recommended image3
OTT : டஜன் கணக்கான ட்விஸ்டுகளுடன் கூடிய டாப் 5 க்ரைம் த்ரில்லர் படங்கள்... ஓடிடியில் மிஸ் பண்ணாம பாருங்க..!
Related Stories
Recommended image1
அடுத்த KGF-ஆ? இல்ல அடுத்த தக் லைஃப்-ஆ? கிங்டம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Now Playing
சூர்யாவின் குரலில் வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படத்தின் டீசர் டீசர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved