MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • kushi first look : காஷ்மீரில் விஜய்யோடு குஷியாக இருக்கும் சமந்தா... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

kushi first look : காஷ்மீரில் விஜய்யோடு குஷியாக இருக்கும் சமந்தா... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

kushi first look : எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான குஷி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அதே தலைப்பில் மேலும் ஒரு படம் தயாராகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : May 16 2022, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை சமந்தா தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் யசோதா, சகுந்தலம், அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் ஆகிய படங்கள் உள்ளன. இதில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார் சமந்தா. விஜய் நிர்வானா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை இப்படக்குழு சர்ப்ரைஸாக கொண்டாடி வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.

34

இந்நிலையில், சமந்தா - விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு குஷி என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

44

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான குஷி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அதே தலைப்பில் உருவாகி உள்ள இப்படம் அதே மாதிரி வெற்றியை ருசிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... salaar : அப்டேட் விடலேனா செத்துருவேன்... சலார் படக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த பிரபாஸ் ரசிகர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved