salaar : அப்டேட் விடலேனா செத்துருவேன்... சலார் படக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த பிரபாஸ் ரசிகர்
salaar : சலார் படம் குறித்து எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர், சலார் படக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குனராக உருவெடுத்துள்ளார் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் சலார். பாகுபலி நாயகன் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
சலார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் நடிப்பில் உருவாகி வரும் சலார் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
சலார் படம் குறித்து எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர், சலார் படக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், சமூக வலைதளத்தில் அதனை பகிர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் சலார் படத்தின் தயாரிப்பாளரை டேக் செய்துள்ளார்.
அந்த கடிதத்தில் இந்த மாதத்திற்குள் சலார் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே ராதே ஷ்யாம் வெளியான போது, அப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்ததன் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மதுரைப் பின்னணியில் கதைக்களம்... கமலுடன் இணைவதை உறுதிசெய்த பா.இரஞ்சித் - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!