மதுரைப் பின்னணியில் கதைக்களம்... கமலுடன் இணைவதை உறுதிசெய்த பா.இரஞ்சித் - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!
Pa Ranjith : விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்துகொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், அடுத்ததாக கமலுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர் மெட்ராஸ் படம் மூலம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு, ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இதன்பின் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். இப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதையடுத்து விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ள பா.இரஞ்சித், அவர் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு மைதானம் என பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்துகொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், அடுத்ததாக கமலுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அது மதுரைப் பின்னணியில் உருவாகும் கதை என்று கூறிய பா.இரஞ்சித், ஆனால் அதில் கமல் வேஷ்டி சட்டை உடன் வரமாட்டார் என்றும் டுவிஸ்ட் கொடுத்துள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் மதுரை கதையில் கோர்ட் சூட்டா என ஷாக் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Kamal : இங்க விடியலை முடிவு பண்றதே நான் தான்! நைசாக அரசியல் பேசி அதகளப்படுத்திய கமல்... அதிர்ந்து போன உதயநிதி