Kamal : இங்க விடியலை முடிவு பண்றதே நான் தான்! நைசாக அரசியல் பேசி அதகளப்படுத்திய கமல்... அதிர்ந்து போன உதயநிதி
Kamal : விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின்னர் படம் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் அவர் நடித்துள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் ஒளிபரப்பப்பட்ட விக்ரம் படத்தின் டிரைலரை பார்த்து உதயநிதி சற்று அதிர்ந்து போனார்.
அதில் இடம்பெற்ற விடியல் டயலாக் தான் அதற்கு காரணம். யாரு.. எப்ப விடியலை பாக்கப்போறாங்குறத முடிவு பண்றதே நான் தான் என அதில் ஒரு டயலாக் இடம்பெற்று உள்ளது. இது திமுகவுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ளதாக வலைதளவாசிகள் பேசி வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ‘விடியல்’ ஆட்சி தரப்போவதாக கூறி தான் பிரச்சாரமே செய்தது. தற்போது அதைப்பற்றி கமல் பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Udhayanidhi Stalin : கமல்ஹாசனை மிரட்டினாரா உதயநிதி?... விக்ரம் பட விழாவில் வெளிவந்த உண்மை