MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Udhayanidhi Stalin : கமல்ஹாசனை மிரட்டினாரா உதயநிதி?... விக்ரம் பட விழாவில் வெளிவந்த உண்மை

Udhayanidhi Stalin : கமல்ஹாசனை மிரட்டினாரா உதயநிதி?... விக்ரம் பட விழாவில் வெளிவந்த உண்மை

Udhayanidhi Stalin : கமல்ஹாசனை மிரட்டி தான் விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் கைப்பற்றியதாக கூறப்பட்டு வந்தது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

1 Min read
Author : Ganesh A
Published : May 16 2022, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

25

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இது பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

35

இந்நிலையில், விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிம்பு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

45

கடந்த சில மாதங்களாக வெளியான பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டு உரிமைகளை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசனை மிரட்டி தான் விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் கைப்பற்றியதாக கூறப்பட்டு வந்தது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

55

இந்நிலையில், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : கமல் சாரை மிரட்டுணீங்களானு கேட்குறாங்க, அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல் சார் யாருக்கும் பயந்தவர் இல்ல என உதயநிதி கூறியபோது அரங்கமே அதிர்ந்தது. மேலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்குமாறு கமலிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள்... Rakshan : ஒரு எபிசோடுக்கு இவ்வளவா... ரக்‌ஷனின் சம்பளத்தை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image2
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Recommended image3
யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved