- Home
- Cinema
- Maargan : நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி – மார்கன் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Maargan : நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி – மார்கன் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Maargan Movie Total Box Office Collection : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் குறித்து பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி
Maargan Movie Total Box Office Collection : இசையமைப்பாளராக இருந்து கொண்டு நடிகராக அவதாரம் எடுத்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நான், சலீம், சைத்தான், எமன் உள்ளிட்ட க்ரைம் த்ரில்லர் படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்தார். அதன் பிறகு தான் பிச்சைக்காரன் படத்தில் நடிக்க அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றார்.
விஜய் ஆண்டனியின் மார்கன்
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2ஆம் பாகமும் வெளியானது. ஆனால், இந்தப் படம் பெரியளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மார்கன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் வந்து செல்ல, பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இந்தப் படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
10 நாட்களில் மார்கன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மார்கன் வெளியாகி முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.85 லட்சம் வசூல் குவித்த நிலையில் 3 நாட்களில் மட்டும் 4.71 கோடி வசூல் அள்ளியது. வார இறுதியில் இந்தப் படம் ரூ.7.13 கோடி வசூல் குவித்த நிலையில் இந்தியா முழுவதும் ரூ.8.41 கோடி வசூல் எடுத்துள்ளது. 4ஆம் தேதி வரையில் மட்டும் மார்கன் உலகம் முழுவதும் ரூ.9.81 கோடி வசூல் எடுத்துள்ளது என்று சைனிக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் எப்படியும் ரூ.11 கோடி வசூல் எடுத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
மார்கன் படம் எத்தனை கோடி வசூல் எடுத்துள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரையில் வெளியிடவில்லை.எனினும் பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமைந்த படமாக இந்த மார்கன் படம் திகழ்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு வள்ளி மயில், அக்னி சிறகுகள், காக்கி, சக்தி திருமகன் என்று பல படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.