Nayanthara : நயன்தாராவை இறுக்கி அணச்சு போஸ் கொடுத்த விக்கி... போட்டோ பார்த்து புலம்பித் தள்ளும் நெட்டிசன்கள்
Vignesh Shivan Nayanthara : நடிகை நயன்தாராவை இறுக்கமாக கட்டிப் பிடித்தவாரு இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tamil Cinema : நடிகை நயன்தாராவுக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. இவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததும் தாய்லாந்து நாட்டுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்ற இந்த ஜோடி, அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு கடந்த வாரம் இந்தியா திரும்பியது.
இதையும் படியுங்கள்... Anushka : இப்படி இருந்தா... நடிகை அனுஷ்காவுக்கு திருமணமே ஆகாது? அடிச்சு சொல்லும் பிரபலம் - காரணம் இதுதானாம்
தற்போது இருவரும் மும்பையில் முகாமிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
இதையும் படியுங்கள்... திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாததற்கு இந்த பாலிவுட் இயக்குனர் தான் காரணம் - புது குண்டை தூக்கிப்போட்ட சமந்தா
அதேபோல் விக்னேஷ் சிவனும் தான் அடுத்ததாக இயக்கவுள்ள அஜித்தின் ஏகே 62 படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... கிளாமரா போட்டோஷூட் நடத்துனது இதுக்குத்தானா..! பிரம்மாண்ட வாய்ப்பை தட்டித்தூக்கிய ரச்சிதா- வாழ்த்தும் ரசிகர்கள்
இவ்வாறு வேலையில் பிசியாக இருந்தாலும், தினசரி இன்ஸ்டாகிராமிலும் போட்டோ போட்டு வருகிறார் விக்கி. அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாராவை இறுக்கமாக கட்டிப் பிடித்தவாரு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ பார்த்த ரசிகர்கள் பலர், இருவரும் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தாலும், சிலரோ சிங்கிள் பசங்கள சோதிக்காதீங்க என கமெண்ட் போட்டு புலம்பி வருகின்றனர்.