தேவையில்லாம மாட்டிக்காதடானு சிம்பு அப்பவே சொன்னாரு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன், சிம்பு தனக்கு கொடுத்த அட்வைஸ் பற்றி பேசி இருக்கிறார்.

டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன், சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படத்தில் இடம்பெறும் '‘வழித்துணையே’ பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதி இருந்தார். அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று சென்னையில் நடைபெற்ற டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டு சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்
அதன்படி டிராகன் படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உடன் ஏற்கனவே தான் எல்கேஜி படத்தில் பணியாற்றியதாக கூறிய விக்னேஷ் சிவன். அப்படத்தில் இடம்பெற்ற ‘திமிரு காட்டாதடி’ பாடலை தான் எழுதும்போது, அதில் தான் சொன்ன வரியை அவர் படத்தில் வைக்கிறேன் என சொல்லிவிட்டு கடைசி வரை வைக்க வில்லை என தெரிவித்தார். அது என்னவென்றால், திமிரு காட்டாதடி என்பதற்கு பதிலாக பிலிமு காட்டாதடி என எழுதி இருந்தாராம் விக்கி, அதை கடைசி வரை லியோன் ஜேம்ஸ் பாடலில் வைக்கவில்லையாம். அதனால் டிராகன் படத்திற்கு பாடல் எழுதும்போது தன்னுடைய வரிகளை மாற்றக்கூடாது என சொல்லியே எழுதினேன் என சொன்னார் விக்கி.
இதையும் படியுங்கள்... நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தைகள்; சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!
விக்னேஷ் சிவனுக்கு சிம்பு கொடுத்த அட்வைஸ்
அதேபோல் எந்த படத்திற்கு பாடல் எழுதினாலும் அதை தன் மனதில் இருந்து ஆத்மார்த்தமாக எழுதுவேன் என கூறிய விக்கி, சில பாடல்கள் தனக்கு மிகவும் நெருக்கமானது. குறிப்பாக போடா போடி பட சமயத்தில் அப்படத்திற்காக ‘அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே’ என ஒரு பாடலை எழுதினேன். அந்த படம் முழுக்க படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், அந்த பாடலை எடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. அதனால் சிம்பு என்னை அழைத்து, டேய் விக்கி, இனிமேல் நீ பாடல் எழுதும்போது வார்த்தைகளை பார்த்து உபயோகப்படுத்து, மாட்டிக்கிட்டேனேனு நீ எழுதுனதுனால பாரு இந்த பாட்டை எடுக்க முடியாம எவ்ளோ நாள் மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு இருக்கனு சொன்னார்.
பிரதீப் விக்கி கூட்டணி
அந்த சமயத்தில் அவர் யதார்த்தமாக சொன்ன அந்த விஷயத்தை கவனத்துடன் கொண்டு பாடல் எழுதி வருகிறேன். குறிப்பாக என்னை அறிந்தால் படத்துக்காக ‘எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்னு’ எழுதிய பிறகு எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. அதற்கு முன்னர் வரை சான்ஸ் கிடைக்காம இருந்தேன். அதனால் பாடல்கள் எழுதும்போது பாசிடிவ் ஆக எழுதுவேன் என கூறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். தற்போது அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... புர்ஜ் கலீபா முன்பு கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா! வைரல் போட்டோ!