எப்போதும் என் உயிர், உலகம் நீதான் தங்கமே! குழந்தை பிறந்த பின்பும் குறையாத காதலுடன் நயன்தாராவை வாழ்த்திய விக்கி
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ரொமாண்டிக் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான நடிகை நயன்தாரா, இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ரொமாண்டிக் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : “உன்னுடன் நான் கொண்டாடும் 9-வது பிறந்தநாள் இது நயன். உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளும் சிறப்பானதாகவும், மறக்கமுடியாததாகவும், வித்தியாசமானதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனென்றால் நாம் கணவன், மனைவியாகவும், இரண்டு அழகான ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோராக கொண்டாடுகிறோம்.
நான் உன்னை ஒரு சக்திவாய்ந்த பெண்ணாகவே அறிந்ததோடு, அதனை பார்த்தும் இருக்கிறேன். நீ எதைச் செய்தாலும், நம்பிக்கையுடனும், அர்ப்பனிப்புடனும் செய்கிறாய். இத்தனை வருடங்களில் நான் உன்னை ஒரு வித்தியாசமான நபராக பார்த்தேன். வாழ்க்கை மட்டுமல்ல எல்லாவற்றிலும் நீ காட்டும் நேர்மை, எப்போதும் என்னை ஈர்த்துள்ளது.
ஆனால் இன்று, உன்னை ஒரு தாயாக பார்க்கும் போது, இது உந்தன் மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம் போல் தெரிகிறது. இப்போது நீ முழுமையடைந்துவிட்டாய். நீ மிகவும் மகிழ்ச்சியாக, கூடுதல் அழகோடு இருக்கிறார். குழந்தைகள் முத்தம் கொடுக்கும் என்பதற்காக இப்போதெல்லம் நீ மேக் அப் போடுவதே இல்லை.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் சர்ச்சை ராணி நயன்தாரா... காதல், கல்யாணம் முதல் குழந்தை பெற்றது வரை அவர் எதிர்கொண்ட சர்ச்சைகள்..!
இத்தனை வருடங்களில் உன்னைவிட அழகான ஒருவரை நான் பார்த்ததே இல்லை. உன் முகத்தில் இருக்கும் சிரிப்பும், ஆனந்தமும் எப்போதும் உன் இயல்பான ஒன்றாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன். தற்போது நான் செட்டில் ஆகிவிட்டது போல் உணர்கிறேன். வாழ்க்கை அழகாகவும் திருப்தியானதாகவும் இருக்கிறது.
நம்முடைய அனைத்து பிறந்தநாளும் இதுபோன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம் குழந்தைகளோடு நாமும் ஒன்றாக சேர்ந்து வளர்வோம். நாம் அனைவரும் போராட கற்றுக்கொள்கிறோம். அதே சமயம் அதை அனுபவிக்கவும் செய்கிறோம். கடவுளின் ஆசிர்வாதத்துடனும், பிரபஞ்சத்தின் சாட்சியுடனும் நமக்கான அற்புதமான வாழ்க்கையை உருவாக்குகிறோம்.
மை டியர் பொண்டாட்டி, தங்கமே எப்போதும் என் உயிர், உலகமே லவ் யூ என காதல் பொங்க பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ‘கலகத் தலைவன்’ ஆக வெற்றி வாகை சூடினாரா உதயநிதி ஸ்டாலின்?... டுவிட்டர் விமர்சனம் இதோ