மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கலகத் தலைவன் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கலகத் தலைவன். நிதி அகர்வால் நாயகியாகவும், பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லனாகவும் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதன்படி நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “கலகத் தலைவன் நேர்த்தியான திரில்லர் திரைப்படம், ஆனால் மகிழ் திருமேனியிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். உதயநிதியின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பு சிறப்பு. அதேபோல் ஆரவ்வின் நடிப்பும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். காதல் காட்சிகள் தான் இப்படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளன. அதேபோல் பின்னணி இசையும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், கலகத்தலைவன் நேர்த்தியான திரில்லர் படம். இரயில்வே ஸ்டேஷன் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியும் செம்ம. ஹீரோயின் வரும் சீன்கள் மொக்கை. அவர் வரும் காட்சிகளை மொத்தமாக தூக்கி இருக்கலாம். இசை சரியில்லை. உதயநிதி, ஆரவ் மற்றும் கலையரசனின் நடிப்பு அருமை. தடம் அளவுக்கு இல்லை என்றாலும் பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையற தாக்க, தடம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த அருண் விஜய், கலகத் தலைவன் படம் பார்த்து பதிவிட்டுள்ளதாவது : கலகத் தலைவன் அருமையாக உள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, சிறப்பான எழுத்து மற்றும் பலமான மெசேஜும் இப்படத்தில் உள்ளது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் உதயநிதி மற்றும் மகிழ் திருமேனி. படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர ஏராளமான ரசிகர்கள் படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக இடைவேளைக் காட்சி வேறலெவல் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதைப் பார்க்கும் போது கலகத் தலைவன் படத்தில் ஒன்றிரண்டு நெகடிவ் இருந்தாலும் படம் அருமையாக இருப்பதாகவே பதிவிட்டு வருகின்றனர். ஆதலால் இப்படமும் உதயநிதியின் வெற்றிப்பட வரிசையில் இணையும் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி இவ்ளோ ஸ்டிரிக்ட் ஆனவரா! ஆடம்பர வீடு... ஆனா பாத்ரூமில் தாப்பால் கிடையாது - ஜான்வி சொன்ன ஷாக்கிங் தகவல்
