ஸ்ரீதேவி இவ்ளோ ஸ்டிரிக்ட் ஆனவரா! ஆடம்பர வீடு... ஆனா பாத்ரூமில் தாப்பால் கிடையாது - ஜான்வி சொன்ன ஷாக்கிங் தகவல்
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், சென்னையில் உள்ள தனது அம்மாவின் ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு திடீரென மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது அங்கு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர், சென்னையில் தனது அம்மா வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. வீட்டு வாசலில் இருந்து அந்த வீடியோவை தொடங்கும், ஜான்வி, முதலில் தனது தந்தை போனி கபூரின் அலுவலகம் அந்த வீட்டில் செயல்பட்டு வருவதாக கூறி அதனை காட்டுகிறார்.
தனது தாய் திருமணமான பிறகு இந்த வீட்டை வாங்கியதாக கூறும் அவர், அந்த வீடு தனது தாயின் நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை தனது தந்தை புதுப்பித்து உள்ளதாக ஜான்வி தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்கள் அந்த வீட்டில் இடம்பெற்றுள்ளதையும் ஜான்வி காட்டியுள்ளார்.
தொடர்ந்து அந்த வீட்டில் உள்ள நினைவுச் சுவர் ஒன்றில் தங்களது குடும்ப புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதை காட்டும் ஜான்வி, இவை அனைத்தும் தனது தாய் ஸ்ரீதேவியின் ஐடியா என கூறுகிறார். அதில் ஸ்ரீதேவியின் திருமண புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதில் அனைவரும் டென்ஷனாக இருப்பதை பார்க்கும் போது இது ஒருவிதமான ரகசிய திருமணம் போல தெரிவதாக ஜான்வி கூறுகிறார்.
இதையும் படியுங்கள்... விக்ரம் பட ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு... தளபதி 67-லும் இடம்பெறும் மாஸான கேரக்டர் - அதில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
பின்னர் மாடியில் உள்ள தனது பொழுதுபோக்கு அறையை சுற்றிக்காட்டும் அவர், அங்கு தான் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறுகிறார். அதேபோல் அங்கு ரகசிய அறை ஒன்று இருப்பதை காட்டும் ஜான்வி, அந்த அறையில் என்ன இருக்கிறது என்று இதுவரை தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு மொட்டை மாடிக்கு செல்லும் ஜான்வி, அங்குள்ள தனது ஜிம்மைக் காட்டி, இதுதான் தனது சரணாலயம் எனக்கூறுகிறார். பின்னர் தானும், தனது சகோதரி குஷி கபூரும் வரைந்த ஓவியங்கள் அங்குள்ள சுவரில் வைக்கப்பட்டுள்ளதை சுற்றிக்காட்டும் ஜான்வி, தனது தாயாரால் தங்களுக்கும் இந்த ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.
இறுதியாக தனக்கு வீட்டில் மிகவும் பிடித்த பாத்ரூமை சுற்றிக்காட்டும் ஜான்வி, தனது அறையில் உள்ள பாத்ரூமிற்கு தாப்பால் கிடையாது என கூறுகிறார். நான் பாத்ரூமை பூட்டிக் கொண்டு ஏதேனும் பசங்களுடன் பேசி விடுவேனோ என பயந்து எனது அம்மா பாத்ரூமில் தாப்பால் வைக்கவில்லை. அம்மா இறந்த பிறகு எனது தந்தை இந்த வீட்டை புதுப்பித்த போதும் எனது பாத்ரூமிற்கு தாப்பால் போடவில்லை என ஜான்வி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... முதல் விமர்சனமே முதல்வரின் விமர்சனம்..! கலகத் தலைவன் படம் பார்த்து மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?