- Home
- Cinema
- அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு எப்போது..? ஹீரோயின் இவரா... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு எப்போது..? ஹீரோயின் இவரா... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 62-வது படப்பிடிப்பு ஆரம்பமாகும் நாள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இவர்? நல்லவரா... இல்ல கெட்டவரா? என்கிற சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழுப்பம்படியான கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாவனி, அமீர், சிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதால், அஜித் அடுத்த படத்திற்கு தற்போது தயாராகியுள்ளார்.
'வாரிசு' இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலையை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்?
அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிக்க இருந்த 62-ஆவது படத்தின்... படப்பிடிப்பு, ஜனவரி 2-ஆவது வாரத்த மும்பையில் துவங்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்தியா முழுவதும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித், விரைவில் வெளிநாடுகளில் பைக் ரெய்டு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளகாக கூறப்படுகிறது.
வாவ்... திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம்! சீரியலுக்கு பிரேக் எடுக்கும் பிரபல நடிகை!