'வாரிசு' இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலையை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்?
'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, வாரிசு திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக, படம் குறித்த முக்கிய தகவல்களையும், லிரிக்கல் சாங் போன்றவற்றை வெளியிட்டு வரும் நிலையில், அண்மையில் 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக வீடியோவுடன் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
அந்த வகையில் டிசம்பர் 24ஆம் தேதி, விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும், தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள், 'வாரிசு' படத்தின் நாயகன் விஜய், இசையமைப்பாளர் தமன், நடிகை ரஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் இதில் கலந்து கொண்ட உள்ளனர்.
வாவ்... திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம்! சீரியலுக்கு பிரேக் எடுக்கும் பிரபல நடிகை!
மேலும் இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகள் தற்போது விறு விறுப்பாக விற்று தீர்ந்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களும் எப்படியும் டிக்கெட்டை வாங்க வேண்டும் என போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 4000 ரூபாய் வரை விக்கப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உச்சகட்ட அதிர்ச்சிகள் ஆழ்த்தி உள்ளது.
மேலும் இதற்கு ரசிகர்கள் சிலர் படத்தின் டிக்கெட் கூட இவ்வளவு விலை இருக்காது? என கமெண்ட் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர், விஜய் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதால்... நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் என்ன பேசுவார்? என்கிற எதிர்பார்ப்பு எழுதுள்ளது. குறிப்பாக விஜய்யின் குட்டி கதையை கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- varisu
- varisu 1st single
- varisu audio function
- varisu audio launch
- varisu audio launch at chennai
- varisu audio launch date
- varisu audio launch full video
- varisu audio launch live
- varisu audio launch promo
- varisu audio launch update
- varisu first single
- varisu latest news
- varisu movie audio launch
- varisu news
- varisu pre productions
- varisu single date
- varisu song
- varisu teaser
- varisu trailer
- varisu update
- varisu vijay
- vijay speech audio launch
- varisu audio launch ticket price