MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாவ்... திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம்! சீரியலுக்கு பிரேக் எடுக்கும் பிரபல நடிகை!

வாவ்... திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம்! சீரியலுக்கு பிரேக் எடுக்கும் பிரபல நடிகை!

பிரபல சீரியல் நடிகை நக்ஷத்திரா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாக, இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 23 2022, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

'யாரடி நீ மோகினி' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை நக்ஷத்திரா, சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

25

கடந்த 2016 ஆம் ஆண்டு, வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்கிற தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்ஷத்திரா. இந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்காக முட்டி மோதி பார்த்தும், பலன் இல்லாமல் போகவே,  சீரியலின் பக்கம் சாய்ந்தார்.

பிரபல நடிகை கனகா வீட்டில் தீ விபத்து..! துணிமணிகள் எரிந்து நாசம்..!

35

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்கிற சீரியலில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் அமைதியான மற்றும் பொறுப்பான மனைவி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் ஈர்த்த நக்ஷத்திரா, இந்த சீரியலை தொடர்ந்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தினார்.

45

மேலும் நக்ஷத்திரா குறித்து சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் ஸ்ரீநிதி கூறியது குறித்து நக்ஷத்திரா விளக்கம் அளித்தார். அதே போல் திடீரென தன்னுடைய காதலர் விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்ட நக்ஷத்திரா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீஸ்ட் வீரராகவன், வலிமை அர்ஜுன் குமார் என 2022 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த டாப் 10 கதாபாத்திரங்கள்!

55

இவர் நடித்து வந்த 'வள்ளி திருமணம்' சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து, இவர் கர்ப்பமாக உள்ளதால் சில நாட்கள் மற்ற எந்த சீரியலிலும் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நக்ஷத்திரா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும்... இவருடைய தோழிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை, இவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து, தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியாகவே ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்... கேன்சல் ஆன ஜாமின்; மீண்டும் சிறை - எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
Recommended image2
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Recommended image3
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved