பீஸ்ட் வீரராகவன், வலிமை அர்ஜுன் குமார் என 2022 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த டாப் 10 கதாபாத்திரங்கள்!
தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 10 கதாபாத்திரங்கள் குறித்த தொகுப்பு இதோ...
பீஸ்ட் - வீரராகவன்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் விஜய்யின் வீரராகவன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்த கதாபாத்திரமாக அமைந்தது.
வலிமை - அர்ஜுன் குமார்
நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த திரைப்படம் 'வலிமை' இந்த படத்தில், அஜித்தின் அர்ஜுன் குமார் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. அஜித்தின் ரசிகர்கள் இந்த பெயரையும், சமூக வலைத்தளத்தில் AK என ட்ரெண்ட் செய்து வந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் - விக்ரம்:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில், கமலஹாசனின் 'விக்ரம்' கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
eatharkkum thunindhavan
எதற்கும் துணிந்தவன் - கண்ணபிரான்:
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தில், நடிகர் சூர்யா கண்ணபிரான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான போது, சூர்யா ரசிகர்கள் பலர் கண்ணபிரான் என்கிற கதாபாத்திரத்தை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்ரா - மதி:
நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருந்த திரைப்படம் 'கோப்ரா'. இப்படம் வெளியாகி, விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தாலும், விக்ரமின் மதி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் - வந்திய தேவன்
இயக்குனர் மணிரத்ன இயக்கத்தில் வெளியான மிகப் பிரம்மாண்ட திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இதில் நடித்த, அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்த கதாபாத்திரம் என்றாலும், வந்திய தேவன் கதாபாத்திரம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
திருச்சிற்றம்பலம் - திரு
மித்ரன் ஜவகர் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற இந்த படத்தில், டெலிவரி பாய்யாக நடித்த தனுஷின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.
வெந்து தணிந்தது காடு - முத்துவீரன்
இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருந்த, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவின் முத்துவீரன் கதாபாத்திரம் தற்போது வரை சிம்பு ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்து வாக்குல ரெண்டு காதல் - ரேம்போ
நானும் ரவுடி தான் படத்திற்கு பின்னர், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்த திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. மாற்று நாயகியாக சமந்தாவும் நடித்திருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு நாயகிகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் ரேம்போ கதாபாத்திரமும் அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்ட ஒன்றாகும்.
பிரின்ஸ் - சக்கரவர்த்தி:
இயக்குனர் அனுப் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பிரின்ஸ்' இந்த படத்தில், சமூக அறிவியல் ஆசிரியராக காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சிவகார்த்திகேயனின் 'சக்கரவர்த்தி'கதாபாத்திரம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.