- Home
- Cinema
- புகழ்பெற்ற தீவில் ஜாலியாக அரட்டை அடிக்கும் விக்கி - நயன் ஜோடி... அங்கு ஒருநாள் தங்குவதற்கு இவ்வளவு செலவாகுமா?
புகழ்பெற்ற தீவில் ஜாலியாக அரட்டை அடிக்கும் விக்கி - நயன் ஜோடி... அங்கு ஒருநாள் தங்குவதற்கு இவ்வளவு செலவாகுமா?
Nayanthara : வேலன்ஸியாவை தொடர்ந்து அங்கிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐபிஜா எனும் தீவிற்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.

நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு 10 நாட்களுக்கு மேலாக இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
ஒருகட்டத்தில் அங்கு ஜோடியாக போட்டோஷூட் நடத்த முடிவெடுத்த விக்கி - நயன் ஜோடி, அந்த நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை நியமித்து அவரையும் தங்களுடனே கூட்டிச் செல்கின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பார்சிலோனாவில் இருவரும் நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்தவாறு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இதையும் படியுங்கள்... திருச்சிற்றம்பலம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட்! நடிகைகள் இன்றி சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்
இதையடுத்து ஸ்பெயினில் உள்ள வேலன்ஸியா நகரத்திற்கு சென்ற விக்கி - நயன் ஜோடி அங்கும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தினர். குறிப்பாக அங்கு நடிகை நயன்தாரா சோலோவாக நடத்திய போடோஷூட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வேலன்ஸியாவை தொடர்ந்து அங்கிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐபிஜா எனும் தீவிற்கு இருவரும் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.
உலகபுகழ் பெற்ற இந்த தீவில் உள்ள சிக்ஸ் சென்செஸ் என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் இருவரும் தங்கி உள்ளனர். அந்த ஹோட்டலில் தங்க ஒரு நாள் வாடகை மட்டும் இந்திய மதிப்பில் ரூ.45 ஆயிரமாம். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். அங்கு விக்கி - நயன் ஜோடி எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... OTTக்கு ரூ.200 கோடிலாம் கம்மிங்க.. தியேட்டரில் இதவிட அதிகவசூல் அள்ளுவோம்- வைரலாகும் லைகர் நாயகனின் பழைய டுவிட்