- Home
- Cinema
- திருச்சிற்றம்பலம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட்! நடிகைகள் இன்றி சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்
திருச்சிற்றம்பலம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட்! நடிகைகள் இன்றி சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்
Thiruchitrambalam : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய திருச்சிற்றம்பலம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை நடிகர் தனுஷ் கொண்டாடி உள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி இருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ், உணவு டெலிவரி செய்பவராக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தனுஷின் அப்பாவாக பிரகாஷ் ராஜும், தாத்தாவாக பாரதிராஜாவும், காதலிகளாக ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கரும், தோழியாக நித்யா மேனனும் நடித்திருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிருத். அவரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன.
தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால், இந்த படத்தின் வெற்றி அவருக்கு புத்துணர்ச்சியை தந்துள்ளது. இப்படத்தின் வெற்றியால் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் நானே வருவேன், வாத்தி போன்ற படங்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு கிடைத்த வெற்றி என்பதால் படக்குழுவினருக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளார் தனுஷ். அதில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் தனுஷ் கொடுத்த இந்த சக்சஸ் பார்ட்டியில் படத்தின் ஹீரோயின்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷ் தேர்ந்தெடுத்த நடிகைகளே வேற..அதிலும் ஷோபனாவாக நடிக்க இருந்தது யார்தெரியுமா?