MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.15 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கை கிஃப்டாக கொடுத்த அஜித்.. AK விடம் பரிசுபெற்ற அந்த லக்கி நபர் யார் தெரியுமா?

ரூ.15 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கை கிஃப்டாக கொடுத்த அஜித்.. AK விடம் பரிசுபெற்ற அந்த லக்கி நபர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தன்னுடன் பயணித்த சக ரைடருக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கை பரிசாக கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 24 2023, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் அஜித், சினிமாவை தாண்டி பைக் ரைடிங் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய இளமை காலங்களில் கார் ரேசிங்கில் தீவிரமாக இருந்த அஜித், அதில் அடுத்தடுத்து விபத்துக்களில் சிக்கியதால், அதனை கைவிட்டார். அதன்பின் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அஜித், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பைக் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

26

சமீபகாலமாக அஜித் அதிகளவில் பைக் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். கடந்தாண்டு இந்தியா முழுவதும் தன்னுடைய பி.எம்.டபிள்யூ பைக்கில் வலம் வந்தார் அஜித். அவருடன் அவரது பைக் ரைடிங் குழுவினரும் சேர்ந்தே பயணித்து வருகின்றனர். பைக்கில் உலக சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் என்பதே நடிகர் அஜித்தின் நீண்ட நாள் கணவாக இருந்தது. அவரின் அந்தக் கனவு தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது.

36

கடந்தாண்டு இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிமுடித்த அஜித், அடுத்தபடியாக தன்னுடைய குழுவினருடம் கடந்த மாதம் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் தன்னுடைய உலக சுற்றுலாவை மேற்கொண்டார். வெற்றிகரமாக முதற்கட்ட உலக பைக் சுற்றுலாவை முடித்த அஜித், தன்னுடைய அடுத்தக்கட்ட பைக் சுற்றுலாவை வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறார். விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த பின்னர் அஜித் இரண்டாம்கட்ட உலக சுற்றுலாவை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘ஏன் இவ்ளோ சீக்கிரம் என்ன விட்டு போன’ திடீரென மரணமடைந்த அம்மா... குக் வித் கோமாளி பவித்ரா போட்ட எமோஷனல் பதிவு

46

இதனிடையே நடிகர் அஜித் தன்னைப்போல் பைக்கில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்காக ஏகே மோட்டோ ரைடு என்கிற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்காக இந்த நிறுவனத்தை அஜித் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

56

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தன்னுடைய சக ரைடருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான BMW பைக்கை பரிசாக நெகிழ வைத்துள்ளார் அஜித். அவரிடம் இருந்து பரிசு பெற்ற அந்த லக்கி நபர் பெயர் சுகத். இவர் அஜித்தின் பைக் பயணங்களில் பக்கபலமாக இருந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு அஜித் சிக்கிமில் பைக் ட்ரிப் சென்றிருந்தார். அதனை ஏற்பாடு செய்து கொடுத்தது சுகத் தானாம்.

66

அஜித் தன்னை தம்பி போல் பார்த்துக்கொள்வதாகவும், அவர் தந்த இந்த பரிசை தன் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு இருக்கிறார் சுகத். அஜித் BMW F 850 GS என்கிற மாடல் பைக்கை தான் சுகத்துக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். அந்த பைக் உடன் சுகத் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Hansika : டேட்டிங் அழைத்து டார்ச்சர் செய்தாரா பிரபல ஹீரோ? - விஷயம் லீக் ஆனதால் உண்மையை போட்டுடைத்த ஹன்சிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?
Recommended image2
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved