பொன்னியின் செல்வனை தொடர்ந்து பிரம்மாண்ட வெளியீட்டிற்கு தயாராகும் விடுதலை முதல் பாகம்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
viduthalai : பொன்னியின் செல்வன் படத்தைப் போல் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தையும் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி என்றால் அது வெற்றிமாறன் தான். தமிழில் இதுவரை அவர் இயக்கத்தில் வெளியான படிக்காதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, விருதுகளையும் வென்று குவித்தது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் என்றால் அது விடுதலை தான். 4 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்ட வெற்றிமாறன் தற்போது அதனை 40 கோடிக்கு மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். குறிப்பாக ஒரு ரயில் சண்டைக்காட்சிக்காக மட்டும் ரூ.8 கோடி செலவு செய்து எடுக்க உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... இன்னும் டிக்கெட் கிடைக்கல... பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பார்த்திபனுக்கே இப்படி ஒரு நிலைமையா!
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இப்படத்தின் கதாபாத்திர தேர்வு, அதன்படி நடிகர் சூரி தான் இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதி வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தைப் போல் விடுதலை படத்தையும் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், விடுதலை படத்தின் முதல் பாகம் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... யம்மாடியோவ்..இவரின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் வாயை பிளந்த நெட்டிசன்கள்..!