இன்னும் டிக்கெட் கிடைக்கல... பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பார்த்திபனுக்கே இப்படி ஒரு நிலைமையா!
Parthiban : சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் பார்த்திபன், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு கனவு படமாக இருந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் தொடங்கி பல்வேறு திரைப்பிரபலங்கள் எடுக்க முயற்சித்த இப்படம் தற்போது தான் திரைவடிவம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் மணிரத்னம். அவரும் இப்படத்தை 11 வருடமாக எடுக்க முயன்று தற்போது தான் வெற்றிகண்டுள்ளார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.
அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நாளை ரிலீசாக உள்ளது. இப்படத்திற்காக கடந்த இரண்டு வாரங்களாக முழுவீச்சில் புரமோஷன் செய்து வந்த பிரபலங்கள் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளதால், முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது பொன்னியின் செல்வன்.
இந்நிலையில், இப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் பார்த்திபன், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திரையரங்குகளில் டிக்கெட் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி பதிவிட்டு வருகின்றனர். சிலரோ இது அவர் புரமோஷனுக்காக போட்ட பதிவு என கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் டிரீட் வெயிட்டிங்.. பொன்னியின் செல்வனோடு வரும் சர்தார் படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்