தியேட்டரில் கூட்டமில்லை; ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட விடுதலை 2 - எப்போ ரிலீஸ்?
Viduthalai 2 OTT Release : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் நடித்துள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
Viduthalai 2 Vijay Sethupathi
தமிழ் திரையுலகின் தோல்வியே சந்திக்காத இயக்குனர் என பெயரெடுத்தவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தில் இருந்து இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன விடுதலை வரை அனைத்து படங்களும் வரிசையாக வெற்றியடைந்தன. அவர் இயக்கிய 7-வது திரைப்படம் தான் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம். இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தி இருந்தார்.
Soori
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இதற்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்திருந்த மஞ்சு வாரியர், அதன்பின்னர் விடுதலை 2 படம் மூலம் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இப்படத்தில் கருணாஸின் மகன் கென், 10 நிமிடம் மட்டுமே வரக்கூடிய சின்ன ரோலில் நடித்திருந்தாலும் அவர் வரும் காட்சிகள் மனதில் பதியும் படி இருக்கின்றன. இப்படி படத்தில் பாசிடிவ் பல இருந்தாலும் அதற்கு ஏற்ப நெகடிவ்வும் நிறம்பி உள்ளதால் விடுதலை 2 படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... சிங்கத்திடம் சரண்டர் ஆன வெற்றி; வசூலில் விடுதலை 2-வை ஓவர்டேக் பண்ணிய முஃபாசா!
Mufasa: The Lion King, Viduthalai 2
விடுதலை 2 திரைப்படம் ரிலீஸ் ஆன 7 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.28 கோடியும், உலகளவில் ரூ.35 கோடிக்கு மேலும் வசூலித்து உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த முஃபாசா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் விடுதலை 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிவை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வாரம் நிறைய புதுப்படங்கள் வந்துள்ளதால் விடுதலை 2 படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன.
Viduthalai 2 OTT Release
தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் விடுதலை 2 திரைப்படம் அடுத்த வாரத்திற்குள் முழுமையாக வாஷ் அவுட் ஆகவும் வாய்ப்புள்ளது. இதனால் அப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இப்படம் ஓடிடியில் வருகிற ஜனவரி மாதம் 24ந் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாம். இதில் கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால் ஓடிடியில் தியேட்டரை விட 1 மணிநேர கூடுதல் காட்சிகளுடன் விடுதலை 2 ரிலீஸ் ஆக உள்ளதாம். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 2024-ல் அதிக IMDb ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்